ஒரே நாளில் 309 சாரதிகள் கைது
ஒரே நாளில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 309 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 44 சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் தினசரி சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (18) மொத்தம் 29,608 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இந்தச் சோதனை நடவடிக்கையில் 549 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையில் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 26 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த நடவடிக்கையின்போது போக்குவரத்து தொடர்பான பிற குற்றங்களுக்காக 4392 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.