கடத்தல்காரரின் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்
இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிராக்டர் வண்டி மற்றும் நிதி நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபா பணம் என்பன 07 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள்
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் பிரகாரம், 2026 ஜூலை 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 07 நாட்களுக்கு இந்த சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, இந்த கடத்தல் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.