போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி; மூன்று கோடி சொத்துக்களை தம்வசமாக்கிய பொலிஸார்
Gampaha
Sri Lanka Police Investigation
Drugs
By Sulokshi
கம்பஹா - பெம்முல்லை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினரின் வீட்டிலிருந்து மூன்று கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தலைமறைவு
சந்தேக நபர்கள் குறித்த பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்களது வீட்டை சோதனையிட்ட போது 2 பஸ்கள், 2 சிறிய லொறிகள், முச்சக்கர வண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US