இலங்கையில் ஒரே நாளில் வசமாக சிக்கிய பல நூறு போதை வியாபாரிகள் ; பொலிஸாரின் அதிரடி
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (27) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 948 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட சோதனைகள்
இதேவேளை 947 விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் நால்வர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, சந்தேக நபர்களிடமிருந்து 588 கிராம் ஹெரோயின், 908 கிராம் ஐஸ், 02 கிராம் கொக்கெய்ன், 01 கிலோகிராம் 678 கிராம் கஞ்சா, 599 கஞ்சா செடிகள், 101 கிராம் குஷ்; ரக போதைப்பொருள், 26 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 2,414 போதை மாத்திரைகள், 74 கிராம் மதனமோதகம் மற்றும் 53 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.