போதைப்பொருள் குற்றங்கள் ; 8 மாதங்களில் 524 பெண்கள் கைது!
நாட்டில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 524 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
22 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் 428 பெண்கள் கைது
அதன்படி, கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் 378 பெண்களும், ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் 434 பெண்களும், போதை மாத்திரைகள் தொடர்பில் 23 பெண்களும்,
ஹேஷ் போதைப்பொருள் தொடர்பில் 6 பெண்களும், கொக்கேயின் போதைப்பொருள் தொடர்பில் 2 பெண்களும், ஏனைய போதைப்பொருட்கள் தொடர்பில் 39 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த 2024 ஆம் ஆண்டில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்தல் மற்றும் தம்வசம் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் 428 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.