அமெரிக்காவை அதிர வைத்த மர்ம ட்ரோன்கள்; விமானப்படைதள வான்பரப்பில் 4 மணி நேரம் பறந்ததால் பரபரப்பு!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தின் வான்பரப்பில் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 9 முதல் 20 வரையிலான காலகட்டத்தில், அலை அலையாக வந்த 12 முதல் 15 ட்ரோன்கள் சுமார் நான்கு மணிநேரம் அந்தப் பகுதியை சுற்றி வந்துள்ளன.

இரண்டாம் உலக போருக்கு பிறகு முடங்கிய அமெரிக்க விமானப்படை தளம்
இந்த ஊடுருவலால் ஈரானுக்கு எதிரான 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், பி-52 ரக குண்டுவீச்சு விமானங்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள முக்கிய ராணுவ தளங்களிலும் இந்த ட்ரோன்கள் தென்பட்டதால் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ட்ரோன்களை முடக்கும் அமெரிக்காவின் ஜிபிஎஸ் எதிர்ப்பு அமைப்புகளும் தோல்வியடைந்துள்ளன இவ்வளவு நீண்ட தூரம் பறக்கும் திறன் ஈரானிடம் இல்லை என்பதால், இதற்கு பின்னால் சீனா அல்லது ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை இரண்டாம் உலக போருக்கு பிறகு முதல்முறையாக ஒரு அமெரிக்க விமானப்படை தளம் போர்க்காலத்தில் முடங்கியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.