சாரதிகளே அவதானம்; இன்றுமுதல் விசேட நடவடிக்கை
இன்றுமுதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கமராப் பிரிவு வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியினை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது மற்றும் வீதிச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி காலி வீதி, பாராளுமன்ற வீதி, கண்டி - நீர்கொழும்பு வீதிகள் ஆகிய இடங்களை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், குறித்த ட்ரோன் கமராக்கள் 5 இடங்களில் இருந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.