குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் ; தீக்கிரையான எரிபொருள் தாங்கிகள்
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் தொட்டி மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ட்ரோன்கள் குறிவைத்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அவசரகால நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு, தீயணைப்புக் குழுக்கள் தீயை அணைக்க விரைந்ததாக ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான ஆரம்பகட்ட அறிக்கைகள் பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டதைக் குறிப்பிட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
⚡️🔥🛩🇰🇼 🇮🇷🇰🇼 Iranian drone strikes #Kuwait's international airport fuel tank
— Mahalaxmi Ramanathan (@MahalaxmiRaman) March 25, 2026
Kuwait airport is on fire.#IranWar #IranVsGulfStates #KuwaitAirport pic.twitter.com/DtL69gOTTa