விளையாடிக் கொண்டிருந்த நாய் குட்டிகள் மீது காரை ஏற்றி கொன்ற சாரதி!
வீதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாய் குட்டிகள் மீது, காரை ஏற்றி கொன்றமை செய்தமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நுவரெலியா – மத்துரட்ட பகுதியில் உள்ள பிரதான வீதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்த முறைப்பாடு மத்துரட்ட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாய் குட்டிகள் மீது வேண்டுமென்று வாகனத்தை ஏற்றி கொன்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துரட்ட பகுதியில் பயணித்த கார் ஒன்றின் சாரதி கடந்த 14ம் திகதி வீதியில் விளையாடிக் கொண்டிருந்த நாய் குட்டிகள் மீது காரை ஏற்றும் சிசிரிவி காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவானது.
இதையடுத்தே, குறித்த காரின் சாரதிக்கு எதிராக மத்துரட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துரட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.