உடல் எடையை குறைக்க இந்த பானத்தை அருந்துங்கள்!
சுரைக்காய் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு பச்சை காய்கறியாகும்.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்புச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பொட்டாசியம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன.
ஆரோக்கியம்
இது தவிர, போதுமான அளவு தண்ணீரும் சுரைக்காயில் உள்ளது. ஆகையால், இதை உட்கொண்டால் உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.
பொதுவாக சுரைக்காய் கறி, பகோடா, கூட்டு அல்லது அல்வா ஆகிய உணவு வகைகள் மிகவும் விரும்பப்படும்.
சுரைக்காய் சாறு குடிப்பது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. மிக விரைவாக இதை தயாரித்து குடிக்கலாம்.
சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
சுரைக்காயில் உள்ள பண்புகள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.
வெயில் காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால், உங்கள் உடல் வெப்பநிலை கட்டுப்படும். அதாவது, வெப்பத்தை எதிர்த்து போராட இது உதவுகிறது.
சுரைக்காய் தொடர்ந்து சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
நோயாளிகளுக்கான மருந்து
சுரைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து போன்றது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
சுரைக்காய் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் இருக்காது.
சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சுரைக்காயில் அதிக அளவில் இரும்புச்சத்து காணப்படுவதால், உடலில் ஹீமோகுளோபினின் சரியான அளவை பராமரிக்க இது உதவுகிறது.
சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் சுரைக்காயில் இயற்கையாகவே கிடைக்கின்றன. எனவே இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
வாந்தி, பேதி சங்கடம் ஏற்பட்டால் சுரைக்காய் தயிர் பச்சடி சாப்பிட்டால், இந்த பிரச்சனைகள் கட்டுப்படும். பலவீன உணர்வு இருக்காது.