இரவு தூங்கும் முன் பாலுடன் தேன் கலந்து குடிங்க
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில பழக்கங்களை தினசரி வழக்கமாக கொள்வது நல்லது.
அப்படிப்பட்ட ஒரு நல்ல பழக்கம் தான் இரவு தூங்கும் முன் பால் குடிப்பது.
குடிக்கும் பாலுடன் ஒருசில பொருட்களை சேர்த்துக் குடிக்கும் போது அந்த பால் இருமடங்கு நன்மைகளை உடலுக்கு வழங்கும்.
தேனுடன் பாலை கலந்து குடிக்கும் போது உடலினுள் இன்னும் ஏராளமான மாற்றங்கள் நிகழும்.
சருமத்திற்கு நல்லது
சரும அழகை மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் தேன் கலந்த பாலைக் குடியுங்கள்.
இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவு குறைந்து, சருமம் பொலிவோடும், ஆரோக்கியமாகவும் காணப்படுகிறது.
செரிமானம் மேம்படும்
செரிமான பிரச்சனைகள் உள்ளதா? அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவதிப்படுவீர்களா? அப்படியானால் தேன் கலந்த பாலை தினமும் குடியுங்கள்.
இதனால் தேனில் உள்ள ஆன்டி வைரல் பண்புகள் குடலில் உள்ள தொற்றுக்களை தடுப்பதோடு, வயிற்று பிரச்சகைளையும் தடுக்க உதவுகிறது.
தேன் கலந்த பாலை தினமும் குடிக்கும் போது அது வயிற்றில் தேவையில்லாத பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
இதன் விளைவாக செரிமானம் பிரச்சனைகளை தடுக்கப்படும்.
எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்
பாலில் கால்சியம் அதிகம் உள்ளன. அதே சமயம் தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்ச உதவுகின்றன.
ஆய்வுகளில் பாலில் தேன் கலந்து குடிப்பது, கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.
கால்சியமானது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
ஆகவே உங்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் தேன் கலந்த பாலை தினமும் குடியுங்கள்.
நல்ல தூக்கம் வரும்
இரவு தூங்கும் முன் பாலில் தேன் கலந்து குடியுங்கள்.
இதனால் அதில் உள்ள சத்துக்கள் செரடோனின் என்னும் நல்ல மனநிலையைப் பெற வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து மனதை ரிலாக்ஸாக்கி, இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவி புரியும்.
முதுமையை தடுக்கும்
சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கிறது.
குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.