அதிரடியாக குறைந்தது தங்கம் விலை; வாங்க சரியான நேரம்!
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
அந்தவகையில் சென்னையில் தங்கம் விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,530 ஆகவும், சவரனுக்கு ரூ. 160 ஒரு சவரன் ரூ.44,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.4,530ஆகவும், சவரனுக்கு ரூ. 128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.