மட்டக்களப்பையே உலுக்கிய கடத்தல் சம்பவத்தில் அதிரடித் திருப்பம்

CID - Sri Lanka Police Batticaloa Colombo Trincomalee Court of Appeal of Sri Lanka
By Sahana Mar 31, 2026 05:48 PM GMT
Report

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறைக்குள் நடைபெற்றது.

டுபாயில் ஏவுகணை சிதறல்கள் விழுந்து விபத்து ; இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயம்

டுபாயில் ஏவுகணை சிதறல்கள் விழுந்து விபத்து ; இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயம்

இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பிரதான சந்தேகநபர்களும், நீதிமன்றில் இருந்த ஏனையோர் வெளியேற்றப்பட்டு, மூடிய அறைக்குள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

கடத்தப்பட்டு கிணற்றில் போடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் முன்னிலையிலேயே இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மட்டக்களப்பையே உலுக்கிய கடத்தல் சம்பவத்தில் அதிரடித் திருப்பம் | Dramatic Twist Kidnapping Incident Rocd Batticaloa

இதன்போது, முதலாவது அடையாள அணிவகுப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், இரண்டாவது அணிவகுப்பில் மூன்றாவது சந்தேகநபரும் சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு, கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

அதே கிணற்றிலிருந்து ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் நேரடி கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பில் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் அவரது 22 வயதுடைய சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி மற்றும் திருகோணமலை வீதிப் பகுதியைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்களும் மற்றும் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட ஆறு பேர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பையே உலுக்கிய கடத்தல் சம்பவத்தில் அதிரடித் திருப்பம் | Dramatic Twist Kidnapping Incident Rocd Batticaloa

மேலும், இவர்களிடமிருந்து இரண்டு முச்சக்கவரண்டிகள், ஒரு கார், கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டனர்.

மயக்க மருந்துகளை விநியோகித்ததாகக் கூறப்படும் ஏழாவது சந்தேகநபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வத்தளை பகுதியில் வைத்து தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்சினி நேற்று அனுமதி வழங்கினார்.

தற்போது கொக்கட்டிச்சோலை பொலிஸாரும், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

காலியில் ரயில் பெட்டிகளில் திடீர் தீப்பரவல்

காலியில் ரயில் பெட்டிகளில் திடீர் தீப்பரவல்

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US