பதவி விலகுகிறாரா சத்தியலிங்கம் ! வைத்தியர் அருச்சுனா பரபரப்பு தகவல்
இலங்கைப் நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் Dr.ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் Dr. ஜெகத் விக்ரமரத்னவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெகு விரைவில் அரசியலமைப்பு சபையில் சுமந்திரன்
சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார, மருத்துவர். நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா எம்பி பதிவிட்டுள்ளதாவது,
இதிலிருந்து தேசியம் கதைக்கும் தமிழரசு கட்சி என்ன வகையான வங்குரோத்து அரசியலை செய்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
வெகு விரைவில் சுமந்திரன் அவர்கள் அந்த அரசியலமைப்பு சபையில் இருப்பார் என்பதை இப்போதே சொல்லி காட்டிக் கொள்கிறேன். முடிந்தால் ஸ்கிரீன்ஷாட் அடித்து வையுங்கள் என அருச்சுனா எம்பி பதிவிட்டுள்ளார்.