கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி
கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது சிறப்பான கல்வித் திறமையால் Dr. ஹாசினி 16 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
MBBS கற்கைநெறியில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த அவர், இறுதி MBBS பரீட்சை உள்ளிட்ட ஐந்து பாடப்பிரிவுகளிலும் முதல் வகுப்பு சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றுள்ளார்.

மருத்துவக் கல்வியில் தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதன் மூலம், பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான தங்கப் பதக்கங்களையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
ஒரே பட்டமளிப்பு விழாவில் 16 தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது Dr. ஹாசினியின் கல்விப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
அவரது இந்த சாதனை கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இலங்கையின் மருத்துவக் கல்வித் துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கல்வியில் கொண்டிருந்த ஆர்வத்தின் மூலம் இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ள Dr. ஹாசினிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.