வரதட்சனை கொடுமை; மாமனாரை கொலை செய்த மருமகன்
தமிழ்நாடு திருவள்ளூர் அருகே உள்ள மகளை வரதட்சனை கொடுமை செய்த மருமகனை தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்போது அதற்கு பலனாக பணம், பரிசு பொருட்கள், கார், தங்க சங்கிலி, மோட்டர் சைக்கிள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை வரதட்சணையாக பெறுவது என்பதை பல வருடங்களாக நடந்து வருகிறது.

தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை
பெரிதாக படிப்பறிவு இல்லாதவர்கள் மற்றும் படிப்பறிவு உள்ள பலரிடமும் கூட இன்னமும் வரதட்சணை வாங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாய்பேட்டையில் தமிழ்ச்செல்வி என்கிற பெண்ணை அவரின் கணவர் ரவீந்தர் மற்றும் அவரின் தந்தை இருவரும் சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்திருக்கிறார்கள்.
இதில் கோபமடைந்த தமிழ்ச்செல்வியின் தந்தை ராஜ் நேரில் சென்று தட்டி கேட்டிருக்கிறார். அப்போது ரவீந்தர் மற்றும் ராஜ் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது மருகமன் ரவீந்தரும், அவரின் தந்தையும் சேர்ந்து ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, ரவீந்தர் தலைமுறைவானார். அவரை தேடும் பணிகள் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்..