இலங்கை தமிழ் இளைஞர்களை விடுவிக்க அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் கைதாகியுள்ள அனைத்து இளைஞர்களையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
அதாவது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த போது இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களின் உறவினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
குறிப்பாக இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீன்பிடித் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் அவர்கள் இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சித்ததாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களும் தற்போது பெங்களூர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாதென சுட்டிக்காட்டிய அமைச்சர், நட்புறவை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.