கழுதைக்கு நர்ஸ் வேலைக்கு அழைப்பு; இணையவாசிகள் திகைப்பு
இந்தியா மத்திய பிரதேச மாநிலத்தில் கழுதைக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின் மாநில துணைத் தலைவர் ரவி பார்மர் ஒரு விசித்திரமான முயற்சியை மேற்கொண்டார்.
அவர் நர்சிங் கவுன்சில் இணையதளத்தில் விண்ணப்பித்த போது, விண்ணப்பதாரர் பெயர் இடத்தில் ‘கழுதை’ என்றும், பெற்றோர் பெயரில் ‘கழுதை தந்தை’, சாதி பிரிவில் ‘விலங்கு’ மற்றும் முகவரியில் ‘கிடைக்கும் இடம்’ என்றும் பதிவிட்டார்.
மேலும், ஆவணங்களுக்கு பதிலாக வெற்று தாள்களையும், புகைப்படத்திற்கு ஒரு நிஜ கழுதையின் படத்தையும் பதிவேற்றினார்.
ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக, எவ்வித ஆவணச் சரிபார்ப்போ அல்லது கள ஆய்வோ இன்றி, விண்ணப்பித்த வெறும் 5 நிமிடங்களிலேயே ‘கழுதை’யின் பெயரில் பதிவு செய்யப்பட்ட செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளருக்கான தற்காலிக டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதில் 2031-ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் வகையில் போபால் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முடித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.