ரணில் கோ ஹோம் என சொல்லாதீர்கள்; ஒத்துழைப்பு வழங்குங்கள்!
“ரணில் கோ ஹோம்” என்று கூறி நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தாமல், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது பணியைத் தொடர குறைந்தது இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முழுமையான தீர்வு காண முடியாவிட்டாலும், நெருக்கடியை தீர்க்கும் நடவடிக்கையை மக்கள் காணமுடியும் எனவும் தேரர் கூறினார்.
அத்துடன் தர்ம தேசிய சபை என்ற வகையில் தாம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அத்துரலியே ரதன தேரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளமை குறிப்பிடதக்கது.