பேரனர்த்தத்தை வைத்து அரசியல்; எதிர்க்கட்சிகள் மும்முரம்
நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளதாகவும் இப்படியான நடவடிக்கையைக் கைவிடுமாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

எதிர்கட்சிக்கு சந்திரிக்க அறிவுரை
இலங்கை முழுவதிலும் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரனர்த்தம் வரலாற்றில் பெரும் அழிவாகப் பதியப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.
பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இப்படியான நடவடிக்கையைக் கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
ஏனெனில் நடந்தது இயற்கைப் பேரனர்த்தம். இதற்கு அரசு மீது குற்றம் சுமத்த முடியாது. இந்தப் பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழ உதவுமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கூறினார்.
இலங்கையில் இயற்கைப் பேரனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அரச நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது