புத்தாண்டில் தப்பி தவறியும் இந்த பொருட்களை வாங்கி விடாதீர்கள்!
ஒவ்வொரு ஆண்டின் துவக்கம் என்பது மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அற்புதமான ஒரு நாளாக இருக்கும். புத்தாண்டில் நாம் வாங்கும் பொருட்களுக்கும், நாம் செய்யும் செயல்களுக்கும் கூட பலன்கள் உள்ளன.
அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி வாங்க கூடாத பொருட்கள் என்னென்ன?
இந்த பொருட்களை வாங்கினால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?
பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.
அதே போல புத்தம் புதிய ஆண்டின் துவக்கமாகிய இந்த நாள் அன்று எக்காரணம் கொண்டும் எவருக்கும் கடனாக பணத்தை கொடுக்கக் கூடாது. பணம் உங்கள் கையில் இருந்து வீணாக விரயம் ஆகக் கூடாது.
அது போல அவசர தேவைக்கு கூட நகைகளை இந்த நாளில் அடமானம் வைக்காதீர்கள், இதுவும் ஒரு கடன் போன்றது தான். நல்ல நாட்களில் விசேஷமான நாட்களில் வாங்க கூடாத ஒரு பொருள் எண்ணெய் ஆகும்.
இந்த எண்ணெயை புத்தாண்டு தினத்தன்று உங்கள் வீட்டிற்காக தவறியும் நீங்கள் வாங்க வேண்டாம். கோவிலுக்கு எண்ணெய் தானம் செய்பவர்கள் செய்து கொள்ளலாம் ஆனால் எந்த வகை எண்ணெயாக இருந்தாலும் அதை வீட்டு பயன்பாட்டிற்கு நீங்கள் அன்றைய தினத்தில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
அப்படி எண்ணெய் தீர்ந்து விட்டால் முந்தைய நாளோ அல்லது மறுநாளோ வாங்கிக் கொள்ளுங்கள். இரும்பு பொருட்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் எதுவாயினும் ஆண்டின் துவக்கத்தில் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கத்தி, அரிவாள், அரிவாள் மனை, கடப்பாரை, நகவெட்டி, மண்வெட்டி போன்ற வெட்டக்கூடிய எந்த வகையான ஆயுதங்களையும் இந்த நாளில் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கூர்மையான ஆயுதங்கள் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக் கூடியது என்பதால் புதிய ஆண்டின் துவக்கத்தில் இதை வாங்குவது நல்லதல்ல. உடல் நல குறைபாடு உள்ளவர்கள், அடிக்கடி மருந்து மாத்திரைகளை வாங்குபவர்கள் மருந்து தீர்ந்து போகும் தருவாயில் இருந்தால் அதை இன்றைய வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
புதிய ஆண்டின் துவக்கத்தில் ஒருபோதும் மருந்து, மாத்திரைகளை வாங்கி நம்முடைய சிந்தனையை நேர்மறையாக மாற்றி அமைக்க கூடாது. நமக்கு நல்ல ஒரு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும், இருக்கின்ற உடல் நல குறைகள் எல்லாம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக் கூடிய அற்புதமான ஆண்டின் துவக்கத்தில் இந்த சில பொருட்களை காசு கொடுத்து வாங்குவதை தவிருங்கள்.
வீட்டில் மிளகாய் பொடி தீர்ந்து விட்டது, குழம்பு மிளகாய் தூள் காலியாகி விட்டது என்று அன்றைய நாளில் மிளகாயை வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து வரக்கூடாது.
நெடி எடுக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் வீட்டில் அன்றைய நாள் வறுக்கவும் வேண்டாம், அதை அரைத்துக் கொண்டு வரவும் வேண்டாம். அப்படி உங்களுக்கு தேவை என்றால் அதை புத்தாண்டு முடிந்த பின்பு மறுநாளில் நீங்கள் செய்து கொள்வது ரொம்பவே நல்லது.
அன்று சமையலில் பாகற்காய் போன்ற கசப்பான பொருட்களையும், அதிக காரம் உள்ள பொருட்களை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. புத்தாண்டு மட்டுமல்லாமல் உங்களுடைய எல்லா நல்ல நாட்களிலும் இதை கடைபிடிக்கலாம்.