புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
புத்தாண்டு காலத்தில் மதுபோதையிலும் கவனயீனமாகவும் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.

2026 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த 4 மாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 248 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, புத்தாண்டு பிறப்புடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றும் நீர்நிலைகளில் கவனியீனமான முறையில் நீராடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.