இரு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டுக்கு வரவேண்டாம்!
கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான நிலையில் கண்டி நகரில் ஏற்கனவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வரிசையில் கூடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , நாளை (24) மற்றும் நாளை மறுநாள் (25) புனித தந்த தாது வழிபாட்டுக்கு ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் வந்துவிட்டதால், அடுத்த இரண்டு நாட்களுக்கும் யாத்ரீகர்கள் வந்தால், அவர்களால் யாத்திரை மேற்கொள்ள முடியாது என பொலிஸர் கூறுகின்றனர்.
எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு யாத்ரீகர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.