முதல் முறையாக கடற்கரையை நோக்கி படையெடுத்த டொல்பின் கூட்டம் ; காணக் குவிந்த மக்கள்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்று (16) மதியம் ஒரு தொகை டொல்பின் மீன்கள் கூட்டமாக கடற்கரையை வந்தடைந்தது.
இந்த நிலையில் இதனை அறிந்த அப்பகுதி மீனவர்கள்,பொதுமக்கள்,பெண்கள்,சிறுவர்கள் என அனைவரும் சென்று பார்வையிட்டதோடு,சிறுவர்களுடன் டொல்பின் மீன்கள் விளையாடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

சுற்றி திரிந்த டொல்பின்
குறித்த டொல்பின் மீன் இனம் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிக்கு கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும்.

நீண்ட நேரம் இலுப்பை கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாக சுற்றி திரிந்த குறித்த டொல்பின் மீன்களை தமது இருப்பிடத்தை நோக்கி செல்ல சில மீனவர்கள் உதவியை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் குறித்த டொல்பின் மீன்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை நோக்கி சென்றது.