இந்த 5 எழுத்துக்களில் உங்கள் மனைவியின் பெயர் உள்ளதா? அப்போ நீங்க அதிஷ்டசாலிதான்!
ஜோதிடத்தின் மூலம் நபரின் இயல்பு, ஆளுமை, எதிர்காலம் அனைத்து அறிந்துவிட முடிகின்றது. கைரேகை, ஜாதகம் இவற்றினை பார்த்து எதிர்காலத்தினை தெரிந்து கொள்ளும் நாம் நமது பெயர்களில் ஆரம்பிக்கும் முதல் எழுத்துக்களை வைத்தும் சில விடயங்களை தெரிந்து கொள்ள முடியும் என சொல்லப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக தன் மனைவியின் பெயரில் இருக்கும் முதல் எழுத்தினை வைத்து அவர்களின் குணங்களை கணவர் எளிதாக அறிந்து கொள்ளலாமாம்.
அந்த வகையல் இந்த 5 எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெண்கள் உங்களுக்கு மனைவியாக அமைந்தால் நீங்கள் பேரதிர்ஷ்டசாலியாம்.

A : என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள், பெரும்பாலும் வாழ்க்கையில் ஏற்படும் முதல் காதலை உண்மையான காதலாகக் கொண்டு, அந்த காதலனையே தங்கள் துணைவனாக்கி, வாழ்க்கை முழுவதும் அவருடனே இருப்பவர்கள். அவர்கள் தங்கள் துணைவரை நேசிப்பது மட்டுமல்லாமல், அவர் மீது அதிக அக்கறையும் காட்டுபவராகவும் இருப்பார்களாம்.
G : என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள், அவர்களும் நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பதோடு, அவர்களுக்கும் நல்ல துணை கிடைக்கும். மொத்தத்தில், இந்த பெண்கள் காதல் விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படுகின்றது.
I : என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிப்பதோடு, அவருக்கு மிகவும் நேர்மையாக இருப்பார்களாம். இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அதிக அளவில் ஆதரவு அளிப்பார்கள். இந்தப் பெண்களின் துணைவராக இருப்பது வாழ்க்கையில் பல வெற்றிகளை காண்பது நிச்சயமாம். அதோடு கணவரின் வெற்றியில் இந்த பெண்களின் பங்களிப்பும் அதிகம் இருக்குமாம்.

N : என்ற எழுத்தில் தொடங்கும் பெண்களும் காதல் விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். சில சமயங்களில் அவர்கள் மிக இளம் வயதிலேயே காதலில் விழுந்து, அவருடன் வாழ்நாள் முழுவதையும் கழிப்பார்கள். இந்த பெண்களுக்கு தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க நன்றாக தெரியுமாம்.
S : என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள் எப்போதும் வாழ்க்கையில் உண்மையான அன்பைத் தேடுகிறார்கள், இதற்காக அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியும் இருக்கும். இந்த பெண்கள் தங்கள் துணையை மிகவும் நேசிப்பவர்களாகவும் , ஆதரவு அளிப்பவர்களாகவும் இருப்பார்களாம்.