பால் உடல் எடையை குறைக்குமா...கூட்டுமா!
பால் பொருட்கள் உடல் எடையை குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இருப்பினும், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பால் பொருட்களில் கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் (சிஎல்ஏ) உள்ளது. இது உடல் பருமனை தடுக்கிறது. இதனால் உடல் பருமன் குறைகிறது.
பால் புரதம் நிறைந்த உணவு.1 கப் பாலில் சுமார் 8.14 கிராம் புரதம் உள்ளது. புரோட்டீன் உணவை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசி இருக்காது. மேலும் ஹார்மோன்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. பால் உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.
கொழுப்பு இல்லாத பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடலாம். இதனால் வயிறு நிரம்புவதுடன், உடல் பருமனும் குறையும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பால் உதவுகிறது. இது எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும். பால் புரதம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது என்று பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
பாலில் உள்ள சத்துக்கள்
பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக கருதப்படுவதோடு வைட்டமின் ஏ, டி, கே, ஈ மற்றும் பல தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. பாலில் பாஸ்பரஸ், மெக்னீசியம், நைட்ரஜன், அயோடின் மற்றும் இதர சத்துக்கள் உள்ளன.
பால் புரதம், லாக்டோஸ் மற்றும் வைட்டமின் பி-2, கால்சியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இந்த கூறுகள் அனைத்தும் எடையைக் குறைக்க உதவுகின்றன.