காபி சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
காபியில் உள்ள காஃபைன் அனைவரையும் அடிமைப்படுத்துகிறது, மேலும் இது சுறுசுறுப்பை தருகிறது. இருப்பினும், சில உயர் இரத்த குளுக்கோஸ் அளவு அறிகுறிகளை அதிகப்படுத்தும் திறன் காரணமாக காபியின் இந்த நன்மை விளைவுகள் குறைவாகவே அறியப்படுகின்றன.
காபி குடிப்பது ஆற்றலை தருகிறது என்றாலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது.
பிரச்சனை
அதுமட்டுமின்றி காபி குடிப்பது சிறுநீரக பிரச்சனை போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, காஃபின் அதிகம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று கூறப்படுகிறது.
காபி ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. காபியில் நிறைய வகைகள் உள்ளது, பிளாக் காபியில் சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் நீரிழிவு நோய் அதிகம் ஏற்படாது ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு கூட பிளாக் காபி குடிக்கலாம்.
அதேபோல சர்க்கரை சேர்க்காமல் குடிக்கும் எஸ்ப்ரெஸ்ஸோ காபி வகையும் சர்க்கரை நோய் அபாயத்தை ஏற்படுத்தாது.கேப்புசினோவில் அதிக கொழுப்பு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தவிர்க்கலாம்.
பிரபலமாக இருக்கும் ஃப்ராப்புசினோ வகை காபி ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரியவர்கள் ஏறத்தாழ 400 மி.கி காஃபின் அதாவது 4 அல்லது 5 கப் பருகலாம், நீரிழிவு நோயாளிகள் காபி அருந்தும் அளவை குறைத்து கொள்வது நல்லது.