ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? விளாசும் அனுர!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி தலைவர், வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலை செய்யாத அரச ஊழியர்கள் வீட்டுக்கு
“வேலை செய்யாத அரச ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று ரணில் கூறுகிறார். ஆனால் ரணிலின் ஊடகப் பிரிவின் எத்தனை இயக்குனர்கள் இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
டைரக்டர் மீடியா ஆலோசகர், மீடியா டைரக்டர் ஜெனரல், டெபுடி டைரக்டர்கள், மீடியா டைரக்டர்கள், வீடியோ எடிட்டிங் டைரக்டர்கள், எலக்ட்ரோரனிக் மீடியா டைரக்டர்கள், கிரியேட்டிவ் போட்டோகிராபி இயக்குனர்கள் இப்படி எத்தனை பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு சம்பளம் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்திற்கு மேல் . அதுதவிர அவர்களுக்கு வாகனங்களும் வழங்கப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் அவர்களின் கடமைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா எனவும் அனுர கேள்வி எழுப்பியுள்ளார்.