சந்தேகநபர் கைதாகியும் தொடரும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்; நோயாளர்கள் அவதி
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர், தங்கும் விடுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சம்பவத்தை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
எனினும் பெண் வைத்தியருக்கு நீதிவேண்டி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம், நாளை (13) காலை 8 மணி வரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத் சுகததாச இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் பெரும் ஏமாற்றம் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.