பிக் பாஸில் இருந்து வெளியேறிய நமீதா குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து காயங்களுடன் தான் நமீதா மாரிமுத்து வந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3 ஆம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் திருநங்கையான நமிதா மாரிமுத்து போட்டியாளரும் கலந்து கொண்டிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே தவிர்க்க முடியாத காரணத்தினால் கடந்த 8 ஆம் திகதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதை குறித்து சோசியல் மீடியாவில் பல வெவ்வேறான வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நமீதா மாரிமுத்து வெளியேறியதை குறித்து தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நமீதா மாரிமுத்து கொரோனா தொற்றால் வெளியேறியதாக கூறப்பட்டபோதும், நமிதா மாரிமுத்துவுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், காயங்களுடன் தான் நமீதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் என்ன விதமான பாதிப்புகள் மற்றும் அவமானங்கள் நிகழ்ந்தாலும் நிகழ்ச்சி 100 நாட்கள் முழுமை பெறும் வரை வாயை திறக்கக் கூடாது என ஒப்பந்தம் அடிப்படையில் சம்பளம் வழங்குவார்கள்.
இதன் காரணமாகவே நமீதா மாரிமுத்து வாயை திறக்காமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான தாமரைச்செல்விக்கும் நமிதாவுக்கும் இடையே வந்த வார்த்தை மோதல் கலவரமாக மாறியதாகவும் அப்போது அவர் கோபத்தில் பொருட்களை தூக்கி போட்டதில் நமீதாவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.