15 வயது சிறுமி குழந்தை பெற்றதை மறைத்த வைத்தியர்!
15 வயதுடைய சிறுமி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் மறைத்து செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையைப் பெற்றெடுத்த சிறுமி பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலை ஊழியர்கள் சந்தேகம்
சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருந்ததால் அவர் பிரசவித்த குழந்தை குறைந்த எடையுடையதாக இருந்ததன் காரணமாக , சிறுமி அறுவைச் சிகிச்சை நிபுணரால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு அனுப்பி வைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
அங்கு அ சிகிச்சை பெற்று வந்த சிறுமி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், வைத்தியசாலை ஊழியர்கள் அது தொடர்பில் வைத்தியசாலை சட்ட மருத்துவப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த வைத்தியர், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அவ்வாறான அறிவித்தகவலை வழங்கக் கூடாது என அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.