ரணிலின் உடல்நிலை குறித்து வைத்தியசாலையிலிருந்து வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வயது காரணமாக அவரது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆபத்தான நிலையில் இல்லை என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, குற்றபுலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.