இருமலுக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுவனை புகைபிடிக்க வைத்த மருத்துவர்!
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை வைத்தியர் புகைப்பிடிக்க வைத்த சம்பவம் குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜலான் நகரில் சளி பிடித்ததால் 5 வயது சிறுவன் மாவட்ட சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
கண்டனங்கள் குவிந்து வருகின்றன
இதன்போது பணியில் இருந்த வைத்தியர் சுரேஷ் சந்திரா, சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி புகைப்பிடிக்க வைத்துள்ளார்.
சிகெரட்டை சிறுவனிடம் கொடுத்து அவனின் வாயில் வைக்க சொல்லி, அந்த சிகரெட்டை வைத்தியர் பற்ற வைக்கிறார். பின் வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் சிகெரெட்டை பல முறை புகைக்கிறான்.
Shocking 🚨
— यमराज (@autopsy_surgeon) April 16, 2025
A doctor posted at CHC in UP’s Jalaun reportedly advised a boy to smoke a cigarette.
He claimed he was treating the child for cough and cold by making him inhale cigarette smoke.
The doctor, Dr. Suresh Chandra, has now been transferred and a probe is underway. pic.twitter.com/1mHJLijgWg
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதேவேளை இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.