மனைவியை கொலை செய்து கடலில் வீசிய மருத்துவர்! அதிர்ச்சி பின்னணி
நியூயார்க்கில் வைத்தியர் ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது உடலை விமானத்தில் இருந்து கடலில் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் வசித்து வரும் பிரபல பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வைத்தியராக Robert Bierenbaum பணியாற்றி வருகிறார். இவரது மனைவி Gail Katz. திருமண வாழ்க்கை இருவருக்கும் ஒத்துப்போகாத நிலையில் அடிக்கடி இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் 1985ஆம் ஆண்டு ஒரு நாள் இருவருக்குள் வழக்கம் போல சண்டை நடந்துள்ளது.

இந்த சண்டையின் போது ரொம்ப கோவமடைந்த Robert Bierenbaum மனைவியை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சொந்த விமானத்தில் உயிரிழந்த மனைவியின் சடலத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் அட்லாண்டிக் கடலில் வீசியுள்ளார்.
பின்னர் கொலை செய்தது சந்தேகம் வராமல் இருக்க மனைவி காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். இப்படியே சுமார் 15 வருடங்கள் நடித்து ஏமாற்றிய Robert Bierenbaumயிடம் சமீபத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மனைவியை கொலை செய்து தனது சொந்த விமானத்தில் இருந்து அட்லாண்டிக் கடலில் வீசியதை ஒப்புக்கொடுள்ளார்.
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2000 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பரோல் வேண்டுக்கோள் நிராகரிக்கப்பட்டது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.