வைத்தியசாலையில் மருத்துவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்!
பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,
பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் காருக்கு பின்னார் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

முச்சக்கரவண்டியை எடுக்குமாறு கூறியதனால் கோபம்
இதன்போது வைத்தியர், முச்சக்கரவண்டியை எடுக்குமாறு சாரதியிடம் கூறியதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வைத்தியரை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிலர் இன்று (17)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 04.00 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.