யாரெல்லாம் பாதாம் சாப்பிடவே கூடாது தெரியுமா?
காலை எழுந்ததும் 4 ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவது நல்லது என்று சொல்லக் கேட்டிருப்போம். எவ்வளவு சிறந்த உணவாக இருந்தாலும் எல்லோரும் சாப்பிட முடியாது இல்லையா? அதுபோல தான் பாதாம் பருப்பும். சில பிரச்சினைகள் இருந்தாலும் சாப்பிடக் கூடாது. அவ்வாறு பாதாம் சாப்பிடக்கூடாதவர்கள் யார் யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

நட்ஸ் அழற்சி பிரச்சினை உள்ளவர்கள்
பொதுவாக நட்ஸ் அழற்சி பிரச்சினை இருக்கிறவர்கள் தேங்காய் சாப்பிட மாட்டார்கள். வேர்க்கடலை சாப்பிட மாட்டார். ஆனால் பாதாமும் ஒரு நட் என்பதை மறந்து விட்டு சாப்பிட்டு விடுகிறார்கள். அப்படி சாப்பிடுவதால் நிறைய அழற்சி பிரச்சினை ஏற்படும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் பாதாம் பருப்பை தினமும் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பாதாம் பருப்பில் உள்ள மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

செரிமானக் கோளாறு
செரிமான மண்டலம் ஏற்கனவே பலவீனமாக உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் பாதாமில் உள்ள நார்ச்சத்துக்கள், டேனின்கள் மற்றும் அதிலுள்ள மொத்தமான தோல் ஆகியவை உங்கள் செரிமானத்தை பாதிக்கலாம்.

வெயிட் லாஸ் டயட்டில் இருப்பவர்கள்
பொதுவாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புரதத்திற்காக அதிகமாக பாதாம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? வெயிட் லாஸ் டயட்டில் இருக்கும்போது தினசரி பாதாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் பாதாமில் கலோரிகள் மிக மிக அதிகம். இதனால் கலோரிகள் அதிகமாகி உடல் எடை அதிகரிக்குமே தவிர குறையாது. தினசரி 6-8 பாதாம் பருப்புகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
கிட்னி ஸ்டோன்
கிட்னி ஸ்டோன் பிரச்சினை இருப்பவர்கள் தினசரி பாதாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பாதாமில் இருக்கும் ஆக்சலேட்டுகள் சிறுநீரகத்தில் உள்ள கால்சியத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உற்பத்தி செய்யும். அதனால் பாதாம், முந்திரி, கீரை வகைகள் உள்ளிட்ட ஆக்சலேட் அதிகமுள்ள உணவுகள் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை ஏற்கனவே உள்ளவர்களுக்கு ஆபத்தானது.
