உலகின் மிகப்பெரிய இராணுவம் எது தெரியுமா? வெளியான உண்மை தகவல்
உலகின் மிகப்பெரிய இராணுவம் சிறீலங்கா இராணுவம்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை என சமூக வலைத்தளப்பதில் சிறீலங்கா இராணுவத்தின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பதிவில் இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இது அவர்களின் போரிடும் ஆற்றல், போர்வலு, படை வலிமை என்பவற்றிலிருந்து பெறப்பட்ட முடிவு அல்ல. மாறாக அவர்களின் ஆளணி எண்ணிக்கையிலிருந்து பெறப்பட்டது. அதாவது ஒரு நாட்டின் நிலப்பரப்பு × மக்கள் தொகைக்கு ஏற்றவாறே உலக நாடுகள் தமது படை ஆளணியைத் தீர்மானித்துக் கொள்ளும்.
ஆனால் ஒரு பருமட்டான உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் கூடத் தெரியாத சிறீலங்கா இந்தத் தியரிக்கு முரணாகத் தனது ஆளணி வளத்தைப் பெருக்கி வைத்திருப்பதாலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
2023 ஆண்டின் கணக்கின் படி இதற்கான பட்ஜெட் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்கள். சிறீலங்காவின் கடன் எவ்வளவு? அதன் வருவாய் எவ்வளவு? என்பதெல்லாம் உலகறிந்த கதை.
அதை பொருண்மிய மொழியில் விளக்கவும் இங்கு இடம் காணாது - அதற்கான தேவையும் இல்லை. 2009 இல் போர் முடிவுக்கு வந்த போது இரண்டரை இலட்சமாக இருந்த ஆளணி மேலும் பெருக்கப்பட்டு 2024 கணக்குப்படி 346,700 ஆகியிருக்கிறது
நந்திக்கடல் கணிதத்தின்படி 2045 காலப்பகுதிதான் தமிழர் தாயகம் என்ற தேச அங்கீகாரமாக நாம் கருதுகிறோம் என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.