மன அழுத்தத்தை நிர்வகிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மன அழுத்தமானது இதய நோய், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
மன அழுத்தமானது நமது உடலை சோர்வுக்கு உட்படுத்தி எந்த ஒரு வேலையிலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியாமல் செய்கிறது. நீண்டகால மன அழுத்த பிரச்சனைகள் இருப்பதற்கு சுற்றுச்சூழல், மரபணு, உளவியல் காரணங்கள் போன்றவை காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
திடீரென ஏற்படக்கூடிய அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. நீண்ட காலமாக இருக்கக்கூடிய மன அழுத்த பிரச்சனைகளை சரியான நேரத்தில் கண்டு சிகிச்சை அளிக்காவிடில் அது மனச்சோர்வு மனநல பிரச்சினைகள் போன்ற நிலைகளுக்கு வழி வகுக்கிறது.
தொடர்ந்து மன அழுத்த பிரச்சனைகள் இருப்பது நமது உடலில் அதிகப்படியான ஹார்மோன்கள் மற்றும் இராசயனங்கள் சுரப்புக்கு வழிவகிக்கிறது. இதுபோன்ற அதிகமான ஹார்மோன் சுரப்புகள் நமது உடலின் முக்கிய பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து மன அழுத்த பிரச்சனை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 20 முதல் 25 சதவிகிதம் பேர் மன சோர்வு பிரச்சனையும் எதிர்கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தை நிர்வகிக்க என்ன செய்ய வேண்டும்?
பல நோய் பாதிப்புகள் இந்த மன அழுத்த பிரச்சனையால் ஏற்படுகின்றன. இருப்பினும் நீங்கள் நினைத்தால் இது போன்ற மன அழுத்தத்தை ஆரம்பித்திலேயே சரி செய்து விட முடியும். மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு என பல வழிகள் உள்ளன.
நீங்கள் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு யோகா தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களில் நீங்கள் அதிகமாக நாட்டம் செலுத்தலாம். குடும்பப் பிரச்சினைகள், பணி சூழலில் பிரச்சனைகள் போன்றவை அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பதுதான்.
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அதற்கான காரணங்களை அறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும். மன அழுத்தம் நாள்பட இருந்தால் அதனால் உண்டாகும் விளைவுகள் குறித்து அறிந்துகொண்டோம்.
எந்த ஒரு அழுத்தமும் நாளடைவில் தானாகவே சரியாகும் அதனால் எந்த ஒரு விஷயத்தை குறித்தும் அதீத கவலை கொள்ளாமல் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள். எல்லாம் தானாகவே சரியாக கூடிய சூழ்நிலைதான் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.