இவர்களை தெரியுமா?
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக தேடப்படும் நான்கு சந்தேக நபர்களின் படங்களை பொலிஸார் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஜூலை மாதம் 9 ஆம் திகதி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்கு சேதம் விளைவித்ததாக கூறப்படுகின்றது.
தேடப்படும் சந்தேகநபர்கள்
இந்நிலையில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
அவர்களது புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார், நான்கு பேரையும் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.
மேலும் 0718 591 588 என்ற எண்ணிற்கு நேரடியாகவோ அல்லது வட்ஸ்அப் மூலமாகவோ தகவல்களை வழங்கலாம் 2எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.