பாதாம் யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா? எச்சரிக்கை தகவல்
ஊட்டச்சத்தான உணவுப் பட்டியலில் நட்ஸ் வகைகளுக்கு தனி இடம் உண்டு. அதிலும் குறிப்பாக மொறுமொறு என வாய்க்கு ருசியாகவும், சத்துக்களை அதிகம் கொண்டதுமாக இருப்பதுதான் பாதாம். ஆனால் அதுவே சிலருக்கு ஆபத்தாகவும் இருக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மேலும் இந்த பாதாமில் அதிக அளவு நன்மையும் உள்ளது. அதில் சில நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் இ என பல நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பாதாம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும் என பல நன்மைகளை படித்திருப்போம்.
இருப்பினும் ஆண்டி பயாடிக் மாத்திரைகள் உட்கொள்பவர்கள், இரத்த அழுத்தம் கொண்டவர்கள், லாக்ஸடிவ்ஸ் மாத்திரை சாப்பிடுவோர், அவற்றை உட்கொள்ளும் வரை தற்காலிகமாக பாதாம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது அல்லது அவர்களின் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு சாப்பிடலாம். ஏனெனில் கையளவு பாதாமில் 0.6 மில்லிகிராம் மினரல் சத்து உள்ளதாம்.
பாதாம் நாளாந்தம் 27 சதவீகிதம் போதுமான மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது உட்கொள்ளும் மாத்திரையோடு தவறான கலவையாக மாறிவிடும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்கா கூறியுள்ளார்.சாதாரணமாகவே பாதாமை அதிகம் உட்கொண்டாலே இரப்பைக் குடல் பிரச்னைகள் வரும் என்கிறார்.
இதேவேளை நட்ஸ் அலர்ஜி கொண்டவர்களும், நட்ஸ் சாப்பிட்ட பிறகு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டு வருகிறீர்கள் என்றாலும் பாதாமை தவிர்க்க வேண்டும்.எனவே பாதாமை குறைந்த அளவு சாப்பிட்டாலே அதன் மருத்துவப் பலன்களை முழுமையாகப் பெறலாம்.