இயங்காத செயற்கைக் கோள்கள் எவ்வாறு அகற்றப்படுகிறது தெரியுமா?
பூமியின் சுற்றுப் பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் செயலில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அவை இயங்குவதை நிறுத்திக்கொள்ளும்.
எனவே செயலற்ற செயற்கை கோள்கள் சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருப்பதால், அவற்றை இரண்டு வழிகளில் அப்புறப்படுத்துவார்கள்.
அதன்படி, பூமியிலிருந்து குறைவான தொலைவிலிருக்கும் செயற்கை கோள்களின் வேகம் குறைக்கப்படுவதன் மூலம் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் அவை படிப்படியாக சுற்றுப்பாதையிலிருந்து விழுந்து வளிமண்டத்தில் எரிந்துவிடுகின்றன.
அதேபோல் பூமிக்கு மிகவும் தொலைவிலிருக்கும் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி விடுவார்கள்.
அதாவது கல்லறை சுற்றுப்பாதையில் அனுப்பிவிடப்படும். பெரிய செயற்கை கோள்கள் தரையை அடைவதற்கு முன்பு முழுமையாக அழியாமல் இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவை மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் அப்புறப்படுத்தப்படும்.
இந்த இடமானது விண்கல கல்லறை எனப்படும். பூமியில் இந்தக் கல்லறை பசுபிக் கடலில் உள்ளது. இது மனிதர்கள் வாழும் இடத்துக்கு மிகத் தொலைவில் உள்ளது.