உங்களுக்கு தெரியுமா? கொலஸ்ட்ரால் மற்றும் பிபி இற்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யவும் ஏராளமான இயற்கை பானங்கள் உள்ளன. அதில் பலருக்கும் ஆச்சரியமளிக்கும் ஒரு வகையான டீ தான் வெங்காய டீ.
வெங்காயம் நமது சமையலில் மிகப்வும் இன்றியமையாத ஒரு பொருள் ஆகும். ஆனாலும் சிலருக்கு சாதாரணமாக வெங்காயத்தை சாப்பிட்டாலே, அதன் நாற்றம் வாயில் நீண்ட நேரம் இருக்கும் என்பதால் வெங்காயத்தின் வாசனையே பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
வெங்காய டீ இன் நன்மைகள்
ஆனால் வெங்காயத்தை நாம் உணவில் சேர்ப்பதால் நம் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றது. அதுபோலவே வெங்காயத்தைக் கொண்டு டீ தயாரித்து குடித்தால், உடலினுள் பல அற்புதங்கள் நிகழும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிலும் குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெங்காய டீ பெரிதும் உதவி புரியும்.
இது தவிர, நாம் அன்றாடம் சந்திக்கும் சில பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, ஆபத்தான நோய்களுக்கு காரணமான ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் வெங்காய டீ உதவி புரியுமாம்.
நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்,
குளிர்காலம் மற்றும் பருவ கால மாற்றங்களின் போது சளி, இருமல் பிரச்சனையை நிறைய பேர் சந்திப்பதுண்டு. ஆனால், வெங்காய டீயைக் குடித்து வந்தால், அது இரத்தத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவுகளை அதிகரிப்பதன் மூலம், நோயெதிர்ப்பு மண்டத்தை வலுப்படுத்துகிறது.
மேலும் வெங்காயத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டிரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இந்த டீயை குடிப்பதன் மூலம் அடிக்கடி சந்திக்கும் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
கொலஸ்ட்ரால் அளவு சீராகும்,
வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் ப்ளேவோனாய்டுகள் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் உற்பத்தியை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாக நோய்களின்றி இருக்க வேண்டுமானால், அடிக்கடி வெங்காய டீ குடித்து வாருங்கள். குறிப்பாக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், வெங்காய டீயை தினமும் குடிப்பது நல்ல பலனைத் தருமாம்.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்,
வெங்காய டீ சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். வெங்காயம் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்கு வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் தான் முக்கிய காரணம்.
எனவே உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை அளவு இருந்தால், வெங்காய டீயை குடித்து வாருங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். செரிமான மண்டலத்திற்கு நல்லது,
வெங்காயத்தில் இனுலின் வளமான அளவில் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடியது.
அடிக்கடி வெங்காய டீயைக் குடித்து வந்தால், குடல் ஆரோக்கியம் சீராக இருப்பதோடு, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
நல்ல தூக்கம் கிடைக்கும்,
நீங்கள் தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியானால் ஒரு கப் வெங்காய டீ குடியுங்கள். இதனால் அதில் உள்ள எல்-ட்ரிப்டோஃபேன் என்னும் ஒரு வகையான அமினோ அமிலம், நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
மேலும் இந்த டீ ஒருவரது மன அழுத்த அளவுகளைக் குறைக்க உதவி புரிகிறது.
இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது,
உயர் இரத்த அழுத்தம் தான் பல இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. வெங்காய டீயில் உள்ள ஃப்ளேவோனால் மற்றும் க்யூயர்சிடின், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் வெங்காயத்தில் உள்ள சல்பர் இரத்தத்தை நீர்க்கச் செய்கிறது. இதன் விளைவாக இரத்தம் உறைவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பிற இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயம் குறைகிறதாம்.
தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் 1 சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, அத்துடன் 2-3 பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, ஒரு பிரியாணி இலையையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
டீயின் நிறமானது அடர் நிறத்தில் மாற ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, அதை வடிகட்டி, அதில் சுவைகேற்ப தேன் மற்றும் பட்டைத் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
வேண்டுமானால், இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து கொள்ளலாம்.
இந்த டீயை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். இல்லாவிட்டால், இதை மாலை வேளையிலும் குடிக்கலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.