ஆளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
ஒரு சமச்சீர் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமல்ல, கொட்டைகள் மற்றும் விதைகளும் உணவில் சேர்க்கப்பட வேண்டும். ஆரோக்கியத்திற்கு பல வகை விதைகள் இருந்தாலும் நாம் இங்கு ஆளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
இந்த விதைகள் உடலுக்கு புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களுடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் வழங்குகின்றன.
செரிமானம் அதிகரிக்கும்
ஆளி விதைகளை சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த விதைகள் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகின்றன. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த இந்த ஆளி விதைகளை உட்கொள்ள வேண்டும்.
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்
ஆளி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதயத்திற்கு இதமானது ஆளி விதைகள். இதில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றன.
எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்
ஆளி விதைகள் எலும்பு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் நிறைந்த இந்த விதைகளை சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்துகிறது.
எடை குறைக்க உதவும்
ஆளி விதைகளை எடை குறைக்கவும் சாப்பிடலாம். இந்த விதைகள் எடை மேலாண்மைக்கு உதவியாக இருக்கும். அவற்றை சாப்பிடுவது பசியை தூண்டாது. இது அதிகப்படியான உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறது.
இளமையை காக்கும்
ஆளி விதை சாப்பிடுவதால் சருமமும் பயனடைகிறது. இந்த விதைகள் சருமத்தை ஊட்டமளித்து, சருமத்தை பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன.