இது தெரிந்தால் இனி கொத்தமல்லி சாப்பிடுவதை நிறுத்தவே மாட்டீங்க
கொத்தமல்லி அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையாகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.
கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.
கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக சமைப்பதும் உண்டு. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.
இதை சுவைக்காக மற்றும் அலங்கரிக்க பயன்படுத்துவதாக நம்மில் பலர் நினைக்கிறார்கள் ஆனால் இதில் இருக்கக்கூடிய மருத்துவ பயன்களானது யாரும் அறியாத ஒன்று
கண் பார்வையை மேம்படுத்தும்
கொத்தமல்லியில் உள்ள வைட்டமின்-A, வைட்டமின்-C, வைட்டமின்-E மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற கூறுகளானது கண் பார்வையை மேம்படுத்தவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதுமட்டுமின்றி கண் நரம்புகளில் உள்ள வறட்சியையம் போக்குகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்ததும்
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த கொத்தமல்லியில் உள்ள டெர்பினைன், குர்செடின் மற்றும் டோகோபெரோல் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களானது உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்
கொத்தமல்லி சாறுகள், விதைகள் அல்லது எண்ணெய்கள் போன்றவை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
நெஞ்செரிச்சல் தீர்க்கும்
ஏப்பம்,நெஞ்செரிச்சல்,மற்றும் வாய்ப்புண்களையும் போன்றவையிலுருந்து தீர்வளிக்க கொத்தமல்லி உதவுகிறது.
குடல் மற்றும் செரிமானத்தை சீராக்க உதவும்
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணக்கூடிய இந்த கொத்தமல்லியானது குடல் மற்றும் செரிமானத்தை சீராக்க உதவுகிறது.
மூட்டு பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்
எலும்பு அடர்த்தியை அதிகரிக்க, மூட்டுவலி அல்லது ஆஸ்டியோ போரோசிஸ் காரணமாக ஏற்படும் மூட்டு பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க இந்த கொத்தமல்லியில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற திசுக்களானது உதவுகிறது.