முக சுருக்கங்களால் கவலையா! இதோ உங்களுக்கான ஈக்ஷி டிப்ஸ்
வயதாக ஆரம்பித்தவுடன் முகத்தில் முதுமையின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் அதாவது சுருக்கங்கள் ஏற்படும்.
அத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவு மற்றும் தோல் பராமரிப்பு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டு வைத்தியங்கள்
சருமப் பராமரிப்பை பின்பற்றினால் நீண்ட காலத்திற்கு அழகாகவும் இளமையாகவும் இருக்கலாம். இந்த உதவிக்குறிப்புகள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இது சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
முக சுருக்கங்கள்
வாழைப்பழ பேஸ் பேக்
இதற்கு வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து நன்றாக மசிக்கவும். பின்னர் இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சீராக முகத்தில் தடவவும்.
அதன் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க விட்டு உலர்த்த பிறகு சுத்தமான நீரினால் கழுவவும்.
இந்த வாழைப்பழ மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே நல்ல பலனைக் காணத் தொடங்கலாம்.
வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால் முகச் சுருக்கங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
தயிர் பேஸ் பேக்
தயிர் மாஸ்கிற்கு இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலக்கவும்.
இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவவும்.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
அதே நேரத்தில் எலுமிச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன அவை சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. தினமும் இரவில் தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் சரும வறட்சியிலிருந்து விடுபடலாம்.
ஆனால் எண்ணெய் சருமத்தில் இந்த செய்முறையை முயற்சிக்க கூடாது என்று கூறப்படுகிறது.
அரிசி பேஸ் பேக்
இதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலக்கவும்.பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முழு முகத்திலும் தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவவும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை தடவுவது நல்லது. அரிசி மாவில் முதுமையைத் தடுக்கும் பண்புகள் இருப்பதால் தோல் பராமரிப்புப் பொருட்களில் அரிசி மாவு அல்லது தண்ணீர் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.