மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்!

Healthy Food Recipes
By Shankar Mar 19, 2023 08:54 AM GMT
Report

நமது அன்றாட வாழ்க்கையில் மூன்று வேலை உணவையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடவேண்டும். குறிப்பாக இரவு உணவை 8 மணிக்கு முன் சாப்பிடுவிட வேண்டும். 10 மணிக்கு மேல் சாப்பிடுவது, சாப்பிட்ட உடனே தூங்கிவிடுவது போன்ற செயல்களை தவிர்த்து கொள்வது நல்லது.

மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்! | Do You Feel Sleepy Right After Lunch Lifestyle

பலருக்கும் மதியம் நன்கு சாப்பிட்டாலே உடனே தூக்கம் வந்துவிடும். சற்று அப்படியே படுத்து எழுந்தால் நன்றாக இருக்குமே என உடல் ஏங்கும். இதனால் சிலர் தலைக்கு மேல் வேலை இருந்தாலும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு கூட மற்ற வேலைகளை பார்ப்பார்கள்.

அப்படி சாப்பிட்டவுடன் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தூக்கம் வர என்ன காரணம்..? இதற்கு வல்லுநர்கள் ’food coma’ என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு என்ன பொருள், இதை சரி செய்ய என்ன வழிகள் என்று பார்க்கலாம்.  

மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்! | Do You Feel Sleepy Right After Lunch Lifestyle

ஃபுட் கோமா என்றால் என்ன..? : ஃபுட் கோமாவின் மருத்துவ பெயர் postprandial somnolence என்று அழைக்கப்படுகிறது. அதாவது இதற்கு சாப்பிட்ட பிறகு உறக்கம் என்று பொருள். இந்த ஃபுட் கோமாவின் அறிகுறிகள் சாப்பிட்டதும் தூக்கமாக வரும், குட்டி தூக்கம் போடலாமா என்று தோன்றும், எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் மந்தமாக இருக்கும்.

இந்த சமயத்தில் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். எழுந்து சுறுசுறுப்பாக வேலை செய்ய நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காது. இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அது ஃபுட் கோமா என்கின்றனர்.  

மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்! | Do You Feel Sleepy Right After Lunch Lifestyle

காரணம் 2 : நீங்கள் வயிற்றுக்கு நிறைவாக மதிய உணவை சாப்பிட்டவுடன் உடலானது அதை செரிமானம் செய்ய ரெஸ்ட் மோடிற்கு செல்லும். இந்த சமயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் வேகஸ் நரம்பு (vagus nerve) தூண்டப்படுகிறது. இது நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு தனது பங்களிப்பை தருகிறது. இதனால் உங்களுக்கு தூக்கம் வருகிறது.

மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்! | Do You Feel Sleepy Right After Lunch Lifestyle

இந்த ஃபுட் கோமாவிலிருந்து விடுபட என்ன வழி..? : இப்போது உங்களுக்கு ஏன் ஃபுட் கோமா உண்டாகிறது என்ற காரணம் புரிந்திருக்கக் கூடும். இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது.

நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது. இப்போது பலரும் இயல்பு நிலைக்கு திரும்பி அலுவலக வேலைக்கு சென்று வருவதால் இன்னும் ஒர்க் ஃபிரம் ஹோம் வாழ்க்கை முறையிலிருந்து மீண்டு வர சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.   

மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்! | Do You Feel Sleepy Right After Lunch Lifestyle

எனவே இதிலிருந்து நீங்கள் விடுபட செய்ய வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்காக,

தூக்க முறையை பின்பற்றுகள் : தினசரி தூங்கும் நேரத்தை வரையறுத்து அதற்குள் தூங்கி எழ முயற்சி செய்யுகள். இரவு 8 மணி நேர தூக்கத்தை உறுதிப்படுத்துங்கள்.

குறைவான உணவு : ஃபுட் கோமாவிற்கு முக்கிய காரணமே அதிகமான உணவுதான். எனவே உங்கள் உணவின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் ஹெவி மீல்ஸ் அல்லாமல் மிதமான உணவு வகைகளை சாப்பிடுங்கள். பின் நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.

மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்! | Do You Feel Sleepy Right After Lunch Lifestyle

ஆக்டிவாக இருங்கள் : சாப்பிட்டவுடனே இருக்கையில் அமர்ந்துவிடாதீர்கள். அங்கும் இங்கும் நடக்கும் வேலைகள், உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வேலைகளை திட்டமிடுங்கள்.

உணவுச் சமநிலை : உணவு சமநிலையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள். அதற்காக கார்போஹைட்ரேட்டை தவிர்க்காதீர்கள். ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் அவசியம். அதோடு புரோட்டீன், ஹெல்தி ஃபேட் மற்றும் காய்கறிகள் இருக்கும் உணவை உட்கொள்ளுங்கள்.

மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்! | Do You Feel Sleepy Right After Lunch Lifestyle

உணவை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள் : மூன்று வேலை உணவையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டுவிடுங்கள். குறிப்பாக இரவு உணவை 8 மணிக்கு முன் சாப்பிடுங்கள். 10 மணிக்கு மேல் சாப்பிடுவது, சாப்பிட்ட உடனே தூங்கிவிடுவது போன்ற விஷயங்களை தவிர்த்துவிடுங்கள். இந்த பழக்கம் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கலாம்.   

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US