தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள்...நடிகை ஹன்சிகா கோரிக்கை
தமிழ் சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தனது கணவர் சோஹைல் கட்டாரியாவை விவாகரத்து செய்து பிரிந்தார். இ ந் நிலையில் நடிகை ஹன்சிகா, தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகள்
தாம் தொடர்பில் சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகள் தொடர்பாக ஹன்சிகா மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
"பொதுவாக பிரபலங்கள் என்றாலே, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் பிரபலங்களுக்கும் மனம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் போது, அவர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதையும் உணர வேண்டும்," என்று தெரிவித்தார்.