மறந்தும் இவற்றினை தயிருடன் சேர்த்து உண்ணாதீர்கள்; காத்திருக்கும் ஆபத்து!
தயிரை நாம் பல வழிகளில் உட்கொள்கிறோம். தயிரில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி2 வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகமாக உள்ளன. தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் செரிமான மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
எனினும் பலருக்கு தயிரை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது தெரியாது.
தயிரை தவறான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது ஆபத்தானது மற்றும் சருமத்தை மோசமாக பாதிக்கும். மோசமான உணவுச் சேர்க்கைகள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

அவையாவன:-
வெங்காயம்:
பெரும்பாலானவர்கள் பிரியாணி போன்றவற்றிற்கு சைடு டிஷ்ஷாக வெங்காயத்தை தயிரில் சேர்த்து கலந்து ரெய்தா தயாரித்து சாப்பிடுகிறார்கள். வெங்காயம் உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. இவை சில நேரங்களில் சிலருகிகு சருமத்தில் தடிப்புகள், அரிக்கும் தோலழற்சி அல்லது எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பிற சரும அழற்சிகளை ஏற்படுத்தும்.

மீன்:
மீன்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரண்டுமே புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். எப்போதுமே புரோட்டீன்கள் நிறைந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
என்டிடிவி அறிக்கையின் படி, தாவர வகை புரோட்டீனுடன், விலங்கு வகை புரோட்டீனை உட்கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் ஒரே வகையைச் சேர்ந்த புரோட்டீன்களை ஒன்றாக சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், அது அஜீரண கோளாறு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பால்:
பால் மற்றும் தயிர் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவை. அதாவது இரண்டுமே விலங்கு வகை புரோட்டீன்கள். எனவே இவை இரண்டையும் ஒன்றாக எடுக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.

உளுத்தம் பருப்பு:
உளுத்தம் பருப்பை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தும். இதன் விளைவாக அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படும்.
வறுத்த உணவுகள்:
எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிரை எப்போதுமே சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது செரிமான செயல்பாட்டை மெதுவாக நடைபெறச் செய்யும் மற்றும் நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருக்க வைக்கும்.

மாம்பழம்:
மாம்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், அது உடலில் வெப்பம் மற்றும் குளிர்ச்சி இரண்டையும் ஒரே வேளையில் உற்பத்தி செய்து சரும பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும் . அதோடு , உடலில் நச்சுக்களை உற்பத்தி செய்யும்.
இது தவிர, தயிரை எப்போதும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் தயிரில் உள்ள புரோட்டீன் மற்றும் ஆற்றல், உடலில் சளியின் அளவை அதிகரிக்கும்.