மீண்டும் கொரோனா பரவலுக்கு இடமளிக்கவேண்டாம்! விசேட வைத்தியர் கோரிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவிலின் தீவிரத்தை சுகாதார தரப்பினர் உள்ளிட்டோரின் ஆர்ப்பணிப்பு மற்றும் மக்களின் ஒத்துழைப்போடு குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தது,
நாட்டில் உள்ள தற்போதைய நிலைமையை சீர்குலைத்து மீண்டும் கொரோனா பரவலுக்கு இடமளிக்கும் எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியான பொது சந்தைகள், மற்றும் மீன்படி பிரதேசங்களில் கொரோனா பரவல் ஆபத்து அதிகமாக காணப்படும் எனவே கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடையாமல் இருக்க சகலரதும் ஒத்துழைப்பும் அவசியம் என ஹேமந்த ஹேரத் கோரியுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரம் அதிகம் உள்ள இடங்களுக்கும் மக்கள் செல்லும் போது அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மிகவும் பாதுக்கப்பாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.