தமிழகத்தில் பரபரப்பு ; திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு; தலைவர்கள் கடும் கண்டனம்
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டு உள்பட அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகின்றதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன் திமுக தொண்டர்கள் அண்ணாநகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தாமரை வீட்டில் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் ஐ.டி.ரெய்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு இடம்பெறுகின்றமை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.